செய்திகள் :

பாமக கொறடா அருளை நீக்கக்கோரி பேரவைத் தலைவரிடம் மனு!

post image

பாமகவின் புதிய கொறடாவாக மயிலம் சிவக்குமாரை நியமிக்க விடும் என்ற பாமக குழு, பேரவைத் தலைவர் அப்பாவுவைச் சந்தித்து மனு அளித்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்.

அதேபோல ராமதாஸுக்கு ஆதரவாக இருப்பவர்களை அன்புமணி நீக்கி வருகிறார். இதனால் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாமக எம்எல்ஏ அருள் கட்சிப்பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்படுவதாக அன்புமணி அறிவித்தார். தன்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று அருள் கூறியிருந்தார்.

தொடர்ந்து பாமக சட்டப்பேரவை கொறடாவாக இருக்கும் அருள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி அறிவித்துள்ளார்.

பாமகவின் புதிய கொறடாவாக மயிலம் சிவக்குமாரை நியமித்து சட்டப்பேரவை ஆவணங்களில் மாற்றம் செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பேரவைத் தலைவரைச் சந்தித்து பாமகவினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பாமக தலைவர் அன்புமணி எழுதிய கடிதத்தையும் அப்பாவுவிடம் வழங்கினர்.

அதேநேரத்தில் பாமக எம்எல்ஏ அருளும் பேரவைத் தலைவரைச் சந்தித்து மனு அளிக்கவுள்ளார். பாமக சட்டப்பேரவைக்குழுத் தலைவர் ஜி.கே. மணி, பாமகவின் கொறடாவாக அருள் தொடர்வார் என்று கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தை அருள், பேரவைத் தலைவரிடம் வழங்க உள்ளார்.

தன்னை பாமக கொறடா பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்க முடியாது என்றும் அருள் கூறியுள்ளார்.

PMK MLAs met with TN Assembly Speaker Appavu and submitted a petition for removing arul and appoint Mayilam Sivakumar as the new PMK whip.

வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம்! - தெற்கு ரயில்வே

சென்னை வேளச்சேரி புறநகர் ரயில் நிலையத்தில் உள்ளரங்கு விளையாட்டுத் திடல் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. புறநகர் ரயில்கள் செல்லும் சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் இறகுப் பந்து, ஜிம்னாஸ்டிக... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிப் படுகொலை!

மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகியும், காரைக்கால் மாவட்டச் செயலாளருமான மணிமாறன் என்பவர், மயிலாட... மேலும் பார்க்க

பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, வரும் பொங்கல் பண்டிகை முதல் மதுரை தோப்பூர் வளாகத்திலேயே செயல்படும் என்று அதன் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் தெரிவித்துள்ளார்.மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயில ச... மேலும் பார்க்க

ஜூலை 7ல் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்!

வருகிற ஜூலை 7 ஆம் தேதி சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழகத்தில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பத்திரப்பதிவுத் துறை அறிவித்துள்ளது. சுபமுகூர்த்த நாள்களில் அதி... மேலும் பார்க்க

ஈட்டிய விடுப்பு சரண் வரும் அக். 1 முதல் நடைமுறை: தமிழக அரசு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாகும் என நிதிநிலை ... மேலும் பார்க்க

கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது!

2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாட்டிற்கும் தமிழர்க... மேலும் பார்க்க