Dhanush: "கங்கையிலே ஒரு வண்ணப் பறவை..!" - Tere Ishk Mein படக்குழு ஸ்டில்ஸ் | Pho...
``ChatGPT உதவியால் ரூ.10 லட்சம் கடனை அடைத்துவிட்டேன்..'' - குடும்பத் தலைவியின் அனுபவப் பகிர்வு!
இப்போதைய உலகின் மந்திரச் சொல் 'AI, ChatGPT'. இதை முறையாகவும், சரியாகவும் பயன்படுத்தினால், நம்முடைய தினசரி நாளில் வெற்றிகரமான பல காரியங்களை சாதித்துக்கொள்ள முடியும். இதை அன்றாட தேவைகளுக்கு மட்டுமல்ல, நம்முடைய சில பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை வழங்கும் இடமாகவும் ChatGPT போன்ற உபகரணங்கள் இருக்கின்றன.
அப்படி அமெரிக்காவில் ஒரு பெண் ChatGPT உதவியுடன் சுமார் ரூ.10 லட்சம் வரை கடனை அடைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அமெரிக்க செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டவை...

ரூ19.7 லட்சம் கடன்
என் பெயர் ஜெனிஃபர் ஆலன், எனக்கு 35 வயது. நான் அமெரிக்காவின் டெலாவேரைச் சேர்ந்தவள். ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். என் குடும்பத்தை சமாளித்துக்கொள்ளும் அளவிலான சம்பளம். அதனால் எனக்கு ஏற்படும் அவசர தேவைகளுக்கு கிரெடிட் கார்டை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
சமீபத்தில் எனக்கு குழந்தை பிறந்தது, சில மருத்துவ அவசரம் காரணமாக $23,000 (சுமார் ரூ19.7 லட்சம்) கடனாகிவிட்டது. அதை நினைக்கும்போதே தலை சுற்றும். எப்படியாவது இந்தக் கடனை அடைத்துவிட வேண்டும் என முடிவு செய்து தேடத் தொடங்கினேன்.
30 நாள் சேலஞ்ச்
அப்போதுதான் ChatGPTயிடம் கடனை அடைப்பது எப்படி என்பது குறித்து தேடினேன். ChatGPT எனக்கு 30 நாள் சேலஞ்ச் ஒன்றை கொடுத்தது. அதை செயல்படுத்தத் தொடங்கினேன். இப்போது சுமார் ரூ.10 லட்சம் கடனை அடைத்துவிட்டேன். அதாவது, ஒவ்வொரு நாளும், AI எளிமையான ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான வேலைகளை பரிந்துரைத்தது.

என்னிடம் இருக்கும் பயன்படுத்தப்படாத subscribe-களை ரத்து செய்தல், மறந்துபோன கணக்குகளை மதிப்பாய்வு செய்தல் போன்ற திட்டங்களை வழங்கியது. அதன் மூலம் என்னுடைய பழைய தரகுக் கணக்கில் $10,000 (ரூ. 8.5 லட்சம்) இருப்பதைக் கண்டுபிடித்தேன். இப்படி என்னிடம் பணம் இருப்பதை நான் மறந்தேவிட்டேன். ChatGPT ஐப் பயன்படுத்தி ஒரு பேன்ட்ரி அடிப்படையிலான உணவுத் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் மளிகைக் கட்டணத்தை மாதத்திற்கு ரூ. 50,000 குறைத்தேன்.
எந்த மந்திர தந்திரமும் இல்லை
இப்படி 30 நாள்களின் முடிவில், என் கடனில் பாதிக்கும் மேலான $12,078 (ரூ.10.3 லட்சம்) திருப்பிச் செலுத்தியிருந்தேன். இது எந்த மந்திர தந்திரமும் இல்லை. நம்முடைய விழிப்புணர்வு, உறுதி, எனது நிதிகளில் கவனம் செலுத்துவது போன்ற நாம் கண்டுகொள்ளாத பக்கங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் சாத்தியமானது. இப்போது மீதமுள்ள கடனை அடைக்க மற்றொரு 30 நாள் சவாலை முடிக்க திட்டமிட்டிருக்கிறேன். உங்கள் பிரச்னைகளிலிருந்து விலகிச் செல்வதை நிறுத்துங்கள். எல்லாம் சரியாகும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.