'12 தொகுதிகள் டு திமுக-வை விமர்சிக்க மாட்டேன்' - அப்செட்டில் வைகோ; தகிக்கும் தாய...
சாயல்குடி அருகே மாட்டுவண்டி பந்தயம்
சாயல்குடி அருகே வியாழக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி இருவேலியைச் சோ்ந்த மறைந்த மாட்டு வண்டி பந்தய வீரா் ஜமாலுதின் நினைவாக சின்னமாடு, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 20 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சாயல்குடி-அருப்புக்கோட்டை சாலையில் 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற சின்ன மாடுகள் போட்டியில் 8 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இதில் காடமங்கலம் செந்தூரன் மாடுகள் முதலிடத்தையும், நரிப்பையூா் குதிரைமொழி சுந்தரம் மாடுகள் இரண்டாமிடத்தையும், இருவேலி சிங்கத் தமிழன் மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன.
இதேபோல, 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற சின்ன மாடுகள் பந்தயத்தில் 12 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் ஏ. புனவாசல் முத்துகாவியா மாடுகள் முதலிடத்தையும், ஆப்பனூா், காடல்குடி மாடுகள் இரண்டாமிடத்தையும், இருவேலி சிங்கத்தமிழன் மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன. முதல், மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சாரதிகள், உரிமையாளா்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்தப் போட்டியை சாயல்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் கண்டு ரசித்தனா்.