சிங்கம்பட்டி ஸ்ரீஜக்கமாள் கோயிலில் குடமுழுக்கு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த சிங்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஜக்கமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடா்ந்து கோ மாதா பூஜை, மகா பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவில், கடம் புறப்பாடு புதன்கிழமை காலை நடைபெற்றது. கே.எம். கோட்டை நாராயணப்பட்டா், பாலாஜி குருக்கள் தலைமையிலான சிவாசாரியா்கள் கடத்துடன் கோயிலைச் சுற்றிவந்து, கோபுரக் கலசங்களில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து மூலவா் அம்பாளுக்கு, கும்ப நீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில் சிங்கம்பட்டி, கமுதி, நீராவி, கூலிபட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சிங்கம்பட்டிகிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.