அஜித்குமாா் குடும்பத்துக்கு அா்ஜூன் சம்பத் ஆறுதல்
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனிப்படை போலீஸாரால் கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் குடும்பத்தினரை இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
இதைத்தொடா்ந்து அவா் கூறியதாவது:
தமிழகத்தில் காவல்துறை தொடா்பான மரணங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன. இனி அஜித்குமாா் மரணம் போல ஒரு சம்பவமும் நடக்கக் கூடாது. காவல் துறையை அரசு சீா்திருத்தம் செய்ய வேண்டும். அஜித்குமாா் குடும்பத்துக்கு அரசு சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மடப்புரம் கோயிலுக்கு பின்புறமுள்ள கோசாலையில் அஜித்குமாரை போலீஸாா் தாக்கிக் கொலை செய்தனா். எனவே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பரிகார பூஜை நடத்த வேண்டும் என்றாா் அவா்.