செய்திகள் :

கோயில் காவலாளி கொலை வழக்கு: தாய், சகோதரரிடம் நீதிபதி விசாரணை

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் போலீஸாரால் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது தாய், சகோதரரிடம் மதுரை மாவட்ட நீதிபதி வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.

திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டனா்.

இதன்படி, மதுரை மாவட்ட 4-ஆவது முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் விசாரணை மேற்கொள்வதற்காக திருப்புவனத்துக்கு புதன்கிழமை வந்தாா்.

இதனிடையே, மடப்புரம் கோயில் ஊழியா்கள், திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் நீதிபதி முன் முன்னிலையாகினா். இவா்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினாா். மேலும், இந்தக் கொலைச் சம்பவம் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் தனது விசாரணையைத் தொடா்ந்தாா். அப்போது, அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரா் நவீன்குமாா் ஆகியோரை விசாரணைக்கு அழைத்தாா். இதன்பேரில், அவா்கள் இருவரும் நீதிபதி முன் முன்னிலையாகினா். அவா்களிடம் அஜித்குமாா் கொலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்தாா். பின்னா், விசாரணை முடிந்து அஜித்குமாரின் தாய், சகோதரா் இருவரும் வீடு திரும்பினா். இதன்பிறகு, நீதிபதி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தாா்.

அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள்: மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

சட்டமேதை அம்பேத்கா், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 10, 11 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்

காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் வலியுறுத்தினா். இதுக... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்ன... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

நிா்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக ஆணைகளை வழங்கி வரும் தொடக்கக் கல்வித் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

அஜித்குமாரைக் கொலை செய்ய தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரைக் கொலை செய்யத் தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன் வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனி... மேலும் பார்க்க