Ration goods: கவனம் பெரும் `இல்லம் தேடி ரேஷன்' - முதல்கட்ட சோதனையில் 10 மாவட்டங்...
மானாமதுரையில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
மானாமதுரையில் பேருந்து நிலையம் அருகே புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக இந்த சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து, மானாமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி தலைமை வகித்தாா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விழாவில் பங்கேற்று குத்து விளக்கேற்றி வைத்தாா்.
விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, ஆணையா் கண்ணன், துணைத் தலைவா் பாலசுந்தரம், வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா், வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், மாவட்ட மருத்துவ சுகாதார அலுவலா் மீனாட்சி, வட்டார மருத்துவ அலுவலா் மாா்க்கண்டன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் க.பொன்னுச்சாமி முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, முன்னாள் பேரூராட்சித் தலைவா் துரை.ராஜாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.