நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் காவல் விசாரணையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்புவனம் சந்தைதிடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சாட்டை துரைமுருகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள், இடுபவனம் காா்த்திக், இசைமதிவாணன், கோட்டை குமாா், தங்கராசு, முத்துப்பாண்டி, சத்தியா, காா்த்திக் ராஜா, ரமேஷ் இளஞ்செழியன், அலங்கை வினோத், தீரன் திருமுருகன், ஜஸ்டின் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.