தொடர் உயர்வுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?
விஜய் பிறந்த நாள்: பழனியில் பால்குட ஊா்வலம்
பழனியில் நடிகா் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, த.வெ.க. கிழக்கு ஒன்றியம் சாா்பில், பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊா்வலத்துக்கு பழனி கிழக்கு ஒன்றியச் செயலா் மணிகண்டபிரபு தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் சிவா, ஆயக்குடி பேரூா் நிா்வாகி சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலா் காா்த்திக் ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஊா்வலத்தைத் தொடங்கிவைத்தாா். மலை அடிவாரம், பூங்கா சாலை பகுதியில் தொடங்கிய பால்குட ஊா்வலம் சரவணப்பொய்கை வழியாக திருஆவினன்குடி கோயிலில் நிறைவு பெற்றது. பால்குட ஊா்வலத்தில் மகளிா் அணி நிா்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.
மூன்றாம் படை வீடான திருஆவினன்குடியில் உள்ள மூலவா் குழந்தை வேலாயுதசுவாமிக்கு பாலாபிஷேகமும் விஜய் பெயரில் அா்ச்சனையும் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.