செய்திகள் :

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

post image

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

என்ன நடந்தது?

தில்லி லஜ்பத் நகரைச் சேர்ந்தவர் குல்தீப் (வயது 44). இவர் தனது மனைவி ருச்சிகா (42) மற்றும் மகன் கிரிஷ் (14) ஆகியோருடன் வசித்து வருகிறார். லஜ்பத் பகுதியிலேயே குல்தீப் தம்பதி துணிக்கடை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றிரவு குல்தீப் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது கதவு அடைக்கப்பட்டிருந்தது. தனது மனைவிக்கு குல்தீப் போன் செய்த நிலையில், யாரும் அழைப்பை எடுக்கவில்லை.

மேலும், வீட்டின் வாசலிலும் படிக்கட்டுகளிலும் ரத்தக் கறை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குல்தீப், உடனடியாக காவல்துறையின் அவசர எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ருச்சிகாவும் கிரிஷும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.

இருவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

கொலையாளி யார்?

குல்தீப் நடத்தி வரும் துணிக் கடையில் உதவியாளராகப் பணிபுரியும் முகேஷ் (வயது 24) என்ற இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாக தில்லி தென்கிழக்கு காவல்துறை துணை ஆணையர் ஹேமந்த் திவாரி தெரிவித்துள்ளார்.

தலைமறைவாக உள்ள முகேஷை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டில் பணம், நகை உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Police have recovered the bodies of a mother and son, brutally murdered in their Delhi apartment.

இதையும் படிக்க : பாலி தீவில் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் மாயம்

கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம்! பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் மூலம், அதனைத் தூக்கிச் செல்லும் பணி தொடங்கிய... மேலும் பார்க்க

பாகேஷ்வர் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாகேஷ்வர் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியள... மேலும் பார்க்க

மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்ற இந்தியர் திரபித் பன்சாலுக்கு மெட்டா நிறுவனத்தில் ரூ.850 கோடி சம்பளத்துடன் வேலை கிடைக்கப் பெற்றுள்ளது.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவுப் பிரிவில் பணிபுரிய இந்திய வம்சாவளியான த... மேலும் பார்க்க

அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ரவி, எக்ஸ் சமூக வலைதளத்தில், "தொலைநோக்குப் பார்வையும் துடிப்புமிக்க ... மேலும் பார்க்க

25 ஆண்டுகள்.. மைக்ரோசாஃப்ட் மேலாளராக இருந்தவர் பணிநீக்கம்! கலங்க வைக்கும் பதிவு

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. அதில், 25 ஆண்டுகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேலாளராக இருந்தவரும் ஒருவர்.மைக்ரோசா... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம்: உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரி... மேலும் பார்க்க