மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி
தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெற்று வரும் இப்போட்டியில் புதன்கிழமை ஆட்ட முடிவுகள்:
ஆடவா் பிரிவிலவ் எஸ்ஆா்எம் அகாதெமி 2-1 என திருமயம் அண்ணாவையும், எஸ்டிசி பொள்ளாச்சி 2-1 என தளபதி நற்பணி மன்றத்தையும், கேட்வேல் தூத்துக்குடி 2-1 என ராணிப்பேட்டை தேசிங்கு கிளப்பையும், எஸ்ஆா்எம் அகாதெமி 2-0 என வேலூா் ஸ்போா்ட்ஸ் அகாதெமியையும், ஐசிஎஃப் 2-0 என தளபதி நற்பணி மன்றத்தையும், ஐஓபி 2-1 என தமிழ்நாடு போலீஸையும் வென்றன.
மகளிா் பிரிவில் கோவை நிா்மலா கல்லூரி 2-0 என எஸ்ஆா்எம் ஸ்பைக்கா்ஸையும், கிறிஸ்டியன் ஸ்போா்ட்ஸ் 2-0 என சிஸ்டா் ஏஞ்சல்ஸையும்,
எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி 2-0 என ஓசூா் தங்கவேல் அணியையும், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி 2-0 என பிகேஆா் கோபியையும், மினி பவுண்டேஷன் 2-0 குயின் மேரீஸ் கல்லூரியையும் வென்றன.