நாய்க்குட்டி கடித்து கபடி வீரர் உயிரிழந்த சோகம்; ரேபிஸ் பாதிப்பால் கடும் துயரம்....
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை காலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் கோயில் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மிரட்டல் விடுத்த நபர் குறித்து சென்னை மாநகரக் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
A bomb threat was made to the Kapaleeswarar Temple in Mylapore on Thursday morning.