ஹரி ஹர வீரமல்லு டிரைலர்!
பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஆந்திரத்தின் துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் 3 படங்கள் (ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங், ஓஜி) தயாராகி வருகின்றன.
சமீபத்தில் ஹரி ஹர வீரமல்லு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ரிலீஸ் தேதி 4 முறைக்கும் மேல் மாறிக்கொண்டே இருக்கும் இருந்தது.
கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கிய இப்படம் வருகிற ஜூலை 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
சமீபத்தில், இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘தாரா தாரா’ என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர்.
நாயகி நிதி அகர்வாலின் நடன காட்சிகள் நன்றாக இருப்பதுடன் மரகதமணியின் இசையமைப்பும் ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்து வருகிறது.
தமிழில் இப்பாடலைப் பா. விஜய் எழுத லிப்ஸியா, ஆதித்யா ஐயங்கார் ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகியுள்ளது.
The trailer of Pawan Kalyan's Hari Hara Veera Mallu has been released.