உணவுக்காக திரண்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 94 பேர் கொலை!
கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!
கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - கூடூர் ரயில் வழித்தடத்தில் கும்மிடிப்பூண்டி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 9.15 மணிமுதல் பிற்பகல் 3.15 மணிவரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
இதையடுத்து மூர் மார்கெட் மற்றும் சென்னை கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து ஆவடி, கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் இன்று மட்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரையுடன் நிறுத்தப்படும், மறுவழித்தடத்தில் கடற்கரையில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் வசதிக்காக மூர் மார்கெட் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து பொன்னேரி, மிஞ்சூர் மற்றும் எண்ணூர் இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இன்று இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Train Service Update – 03rd July 2025
— Southern Railway (@GMSRailway) July 2, 2025
Due to engineering work between Gummidipundi–Kavaraipettai, some EMU/MEMU trains will be fully or partially cancelled from 09:15 to 15:15hrs. Passenger specials will be operated in lieu.
Plan your journey accordingly.#southernrailwaypic.twitter.com/h4qYI754ss
Southern Railway has announced that 38 electric train services operating on the Gummidipoondi route will be cancelled on Thursday.