செய்திகள் :

13 வயது சிறுவன் கடத்திக் கொலை; கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் - மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13). இவர் நேற்று மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரோகித்தின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்சட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவே புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், பெற்றோர் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், கடத்தப்பட்ட சிறுவன் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை எனக் கூறி, பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் இன்று காலை சாலையில் அமர்ந்து சிறுவனை கண்டுபிடித்து தர கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

murder

இந்த நிலையில், மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சிறுவன் அஞ்செட்டி - ஒகேனக்கல் செல்லும் சாலை ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுவனின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிறுவனின் நண்பர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காரில் வந்த மர்ம நபர்கள் யார்? சிறுவனின் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 13 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்: `என் வீடு என் காதலிக்குத்தான்!’ - கறார் காட்டிய கணவரை கடப்பாரையால் குத்திக் கொலைசெய்த மனைவி

கடலூர் மாவட்டம், நெய்வேலி இந்திரா நகர் பி-2 மாற்றுக் குடியிருப்பைச் சேர்ந்த 62 வயது கொளஞ்சியப்பன், என்.எல்.சி-யில் ஊழியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திரா நகரில் உள்ள த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஏ.ஐ பயன்படுத்தி தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3.2 மோசடி; பாஜக மேலவை உறுப்பினர் புகார்!

ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்யப்படுவது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இம்மோசடி மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.க்களையும் பாதிக்க ஆரம்பித்து இருக்கிறது. மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்கள், சட்டமேலவை... மேலும் பார்க்க

அஜித்குமார்: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பல லட்சம் மோசடி; நிகிதா மீது குவியும் புகார்கள்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தச் சம்பவத்திற்குக் காரணமான புகாரை அளித்த நிகிதா மீது கூறப்படும் மோசடி... மேலும் பார்க்க

நாமக்கல்: ஓய்வறையில் பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்; போலீஸ் தீவிர விசாரணை; பின்னணி என்ன?

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் காமாட்சி. இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.பணியை முடித்துக் கொண்டு நள்ளிரவ... மேலும் பார்க்க

'நான் தான் நீலகிரி கலெக்டர்'-போட்டோவோடு பலருக்கும் சென்ற வாட்ஸ் அப் மெசேஜ்... அதிர்ச்சி பின்னணி!

நீலகிரி மாவட்ட ஆட்சியராக லக்ஷ்மி பவ்யா தன்னீரு பதவி வகித்து வருகிறார். முந்தைய ஆட்சியர்கள் பயன்படுத்தி வந்த அரசின் சி.யூ.ஜி கைப்பேசி எண்ணினை அரசு அலுவலுக்காக இவரும் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியராக கை... மேலும் பார்க்க

விடுதி வளாகத்தில் விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி... சிவகங்கையில் சோகம்!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரின் மகள் பிருந்தா. இவர் காளையார்கோயில் அருகே ஆண்டிச்சியூரணியில் உள்ள புனித பெனடிக் பெண்கள் விடுதியில் தங்கி சகாயராணி பெண்கள் மேல்நிலைப... மேலும் பார்க்க