செய்திகள் :

விடுதி வளாகத்தில் விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி... சிவகங்கையில் சோகம்!

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரின் மகள் பிருந்தா. இவர் காளையார்கோயில் அருகே ஆண்டிச்சியூரணியில் உள்ள புனித பெனடிக் பெண்கள் விடுதியில் தங்கி சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.

சிவகங்கை

இந்த நிலையில் நேற்று அதிகாலை விடுதி வளாகத்திலுள்ள வேப்பமரத்தில் சால்வையால் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார் பிருந்தா. இதைப் பார்த்த சக மாணவிகள் பதறியுள்ளனர். உடனே விடுதி நிர்வாகி காவல்துறையினருக்கு தகவல் சொல்ல, உடல் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

உடற்கூறாய்வு நடந்த நிலையில், 'பிருந்தாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, விடுதி நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும்' என்று வலியுறுத்தி மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

பின்பு காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி, மர்ம மரண வழக்காக மாற்றி பதிவு செய்ததாக தெரிவித்தனர். பின்பு அமைச்சர் பெரியருப்பன் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டத்தை நிறுத்திக் கொண்ட உறவினர்கள், பிருந்தாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமார் லாக்கப் மரணம், சிங்கம்புணரி தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம், தற்போது தனியார் விடுதி 9 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் என... துயரச் செய்திகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

'நான் தான் நீலகிரி கலெக்டர்'-போட்டோவோடு பலருக்கும் சென்ற வாட்ஸ் அப் மெசேஜ்... அதிர்ச்சி பின்னணி!

நீலகிரி மாவட்ட ஆட்சியராக லக்ஷ்மி பவ்யா தன்னீரு பதவி வகித்து வருகிறார். முந்தைய ஆட்சியர்கள் பயன்படுத்தி வந்த அரசின் சி.யூ.ஜி கைப்பேசி எண்ணினை அரசு அலுவலுக்காக இவரும் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியராக கை... மேலும் பார்க்க

மும்பை: பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை; ஆசிரியைக் கைது; விசாரணையில் பகீர் தகவல்கள்

மும்பையில் உள்ள பிரபலமான ஆங்கில மீடிய பள்ளியில் 40 வயது ஆசிரியை ஆங்கிலம் கற்பித்து வந்தார். இதே பள்ளியில் 11 வகுப்பு படிக்கும் 16 வயது மாணவனைக் கட்டாயப்படுத்தி நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்ற... மேலும் பார்க்க

அஜித்குமார் : `ஐஏஎஸ் உறவினரும் இல்லை; எந்த செல்வாக்கும் இல்லை; நாங்களே..!' - புகார் கொடுத்த நிகிதா

’’எங்கள் நகையைக் காணவில்லை என்றுதான் புகார் கொடுத்தேன். காவலாளி அஜித்குமார் இறந்துவிட்டார் என போலீஸ் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். இந்தப் பாவத்தை நாங்கள் எப்படி சுமப்போம் என்று நானும் அம்மாவும் ... மேலும் பார்க்க

'35 சவரன் நகைகளை இரவல் கொடுத்து இழந்த பெண்' - கணவன் கேட்டதால் தீக்குளித்த அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள செண்பகத்தறை பகுதியை சேர்ந்தவர் வடிவேல். வெளிநாட்டில் வேலை செய்துவந்தார். இவருக்கும் ஊற்றுக்குழி பகுதியை சேர்ந்த ஶ்ரீஜா(37) என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டு... மேலும் பார்க்க

'மனைவியோடு தொடர்பிலிருந்த சகோதரர்; கொலை செய்ய வெளிநாட்டில் இருந்து வந்த கணவர்' - அதிர்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். முருகேசனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையி... மேலும் பார்க்க

``யூ டியூப் பார்த்து கழிவறையில் சுயபிரசவம்'' - 2 குழந்தைகளை கொன்று புதைத்த பெண்.. பகீர் வாக்குமூலம்

கேரள மாநிலம் திருச்சூர் புதுக்காடு அருகே உள்ள மட்டனூரைச் சேர்ந்தவர் அனீஷா(22). லேப் டெக்னீசியனான இவருக்கும் ஆம்பல்லூரைச் சேர்ந்த பபின்(25) என்ற இளைஞருக்கும் முகநூல் மூலம் 5 ஆண்டுகளுக்கு முன் காதல் மலர... மேலும் பார்க்க