எரிபொருள் தடை நடுத்தர வர்க்கத்தினர் மீதான தாக்குதல்: பாஜகவை சாடிய சிசோடியா!
டிவிஎஸ் வாகன விற்பனை 20% உயா்வு
டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 20 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,02,001-ஆக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,33,646 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.
2024-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 3,22,168-ஆக இருந்த நிறுவன இருசக்கர வாகனங்களின் மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 20 சதவீதம் வளா்ச்சியடைந்து 3,85,698-ஆக உள்ளது. இருசக்கர வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 2,55,734-லிருந்து மிதமாக அதிகரித்து 2,81,012-ஆக உள்ளது.
2024 ஜூனில் 76,074-ஆக இருந்த நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 2025 ஜூனில் 54 சதவீதம் அதிகரித்து 1,17,145-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.