140 கோடி மக்களில் ஒருவராக... கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
7 நாள்கள் ஓய்வுக்குப் பிறகும் பும்ரா விளையாடாதது அதிர்ச்சி..! ரவி சாஸ்திரி விமர்சனம்!
இந்தியாவின் முன்னாள் வீரர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடாதது ஆச்சரியம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.
பர்மிங்ஹாமில் நேற்று (ஜூலை 2) தொடங்கிய 2-ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல்நாள் முடிவில் இந்திய அணி 310/5 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் பும்ரா இல்லாமல் களமிறங்கியது மிகுந்த விமர்சனத்துக்குள் உள்ளாகி வருகிறது.
ஏற்கெனவே, முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வியுற்றதால் இந்தியாவின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் டிவியில் பேசியதாவது:
உலகின் சிறந்த பந்துவீச்சாளரை இப்படி செய்வதா?
இந்தத் தொடரில் இந்தப் போட்டி மிக முக்கியமானது. ஏற்கெனவே, இந்திய அணி நியூசிலாந்திடம் 3-0 எனவும் ஆஸ்திரேலியாவிடம் 3-1 எனவும் தோல்வியுற்றது.
இங்கிலாந்திடம் முதல் போட்டியை தோற்ற பிறகு வெல்வதற்குதான் முயற்சிக்க வேண்டும்.
உலகின் சிறந்த பந்திவீச்சாளரான பும்ராவை 7 நாள்கள் ஓய்வுக்குப் பிறகும் அணியில் விளையாட வைக்காதது நம்புவதற்கே கடினமாக இருக்கிறது.
இந்தப் போட்டியில் வென்று 1-1ஆன பிறகு லார்ட்ஸ் போட்டியில் வேண்டுமானால் ஓய்வு எடுத்திருக்கலாம். யார் போட்டியில் விளையாட வேண்டுமென்பது கேப்டன், பயிற்சியாளர் கையில்தான் இருக்கிறது என்றார்.
Former India head coach Ravi Shastri expressed disbelief at India's decision to rest a fully fit Jasprit Bumrah from the second Test against England, asserting that the pace spearhead should not have been given the option to sit out of a crucial game.