140 கோடி மக்களில் ஒருவராக... கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
பேட்டிங்கில் 83 ரன்கள், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள்: ஆட்ட நாயகன் அஸ்வின்!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ஆர். அஸ்வின் ஆல்ரவுண்டராக அசத்தியதால் எலிமினேட்டரில் ஆட்டநாயகன் விருது வென்றார்.
டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்படும் ஆர். அஸ்வின் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.
திருச்சி அணி 140/9 ரன்கள் எடுக்க, திண்டுக்கல் அணி 16.4 ஓவர்களில் 143/4 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் 83 ரன்களும் எடுத்து அசத்திய அஸ்வின் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
அஸ்வினின் இந்த ஆட்டத்துக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அஸ்வின் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு கடந்த சீசனில் விளையாடினார். அதில் சுமாராகவே செயல்பட்டார். அதனால், விமர்சனத்துக்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரில் அற்புதமாக விளையாடி வருகிறார்.
அடுத்ததாக அஸ்வினின் திண்டுக்கல் அணி குவாலிஃபயர் 2 போட்டியில் ஜூலை 4ஆம் தேதியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸுடன் மோதவிருக்கிறது.
Dindigul Dragons captain R. Ashwin won the Man of the Match award in the Eliminator for his impressive all-round performance.