140 கோடி மக்களில் ஒருவராக... கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: கனரா வங்கியைத் தொடர்ந்து மற்றொரு வங்கி!
பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை; அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
பொதுவாக வங்கிகளில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பத்தொகை கிராமப்புறங்களில் குறைவாகவும், பெருநகரங்களில் அதிகமாகவும் உள்ளது.
இந்த நடைமுறை ஏழை,எளிய மக்களை வெகுவாக பாதித்து வந்தது. சில கணக்குகளில் இவ்வாறு அபராதத் தொகை வசூலித்தே அதில் இருக்கும் பணம் அனைத்தும் காலியாகும் நிலையும் உருவாகி வந்தது.

இந்நிலையில், அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டுவந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்தது. இந்த நடைமுறை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2020-ஆம் ஆண்டிலேயே இந்த அபராதத்தைக் கைவிட்டுவிட்டது. அந்த வரிசையில் மற்றொரு பொதுத் துறை வங்கியான கனரா வங்கி கடந்த மாதம்(ஜூன்) குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை என்று தெரிவித்தது.
இந்த வரிசையில் தனியார் வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் இணைந்துள்ளது. வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் நோக்கிலும் அவர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Punjab National Bank has announced that it will no longer require the maintenance of a minimum balance in savings accounts of the bank and that the penalty imposed for this will be waived.
இதையும் படிக்க: ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்டுமா?