செய்திகள் :

சுவர், சுவிட்ச் அனைத்தும் 24 காரட் தங்கத்தில்! அரசு ஒப்பந்ததாரர் வீடு என்றால் சும்மாவா?

post image

இந்தியாவில் இருக்கும் மிகவும் வித்தியாசமான வீடுகள் மற்றும் பங்களாக்களை விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பிரபலமானவர் பிரியம் சரஸ்வத்.

இவர் அண்மையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கட்டப்பட்டிருக்கும் 24 காரட் தங்க வீட்டை விடியோ எடுத்து வெளியிட்டிருந்தார். இப்போது யாரும் இந்த விடியோவை பார்க்க முடியாது. ஏனென்றால், பல்வேறு காரணங்களால் அந்த விடியோவை அவர் நீக்கிவிட்டிருக்கிறார்.

ஆனால், அவர் பதிவிட்ட வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் கண்களையும் விரியச் செய்திருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநில அரசு ஒப்பந்ததாரராக இருக்கும் அனூப் அகர்வாலின் வீடுதான் அது. வீட்டின் சுவர், சுவிட்ச் போர்டு கூட தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மின்னுவதெல்லாம் பொன் அல்ல என்று சொல்லும் பழமொழியை பொய்யாக்கி, அவர் வீடு முழுக்க தங்கம் மின்னிக்கொண்டிருக்கிறது.

நாற்காலிகள், விளக்குகள், பொம்மைகள் என அனைத்தும் தங்கத்தால் ஆனவை, அல்லது தங்கத் தகடால், தங்க முலாம் பூசப்பட்டவை. தண்ணீர் குழாய்கள் கூட தங்க முலாம் பூசப்பட்டிருக்கும் என்பதைத்தான் பலரும் அதிசயத்துடன் பார்த்துள்ளனர்.

இந்த வீட்டின் அலங்காரம் குறித்து அனூப் அகர்வால் கூறுகையில், சாலைகள் போடுகிறோம், மேம்பாலம் கட்டுகிறோம், அதனால் எனது நிலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்று விடியோவில் கூறியிருந்தார்.

இந்த விடியோ வைரலான நிலையில், பலரும், மோசமான விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர். காங்கிரஸ் கட்சியினர், இப்போது தெரிகிறதா ஏன் புதிதாகப் போடப்படும் சாலைகளும் மேம்பாலங்களும் விரிசல் விடுகிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த வீடு முழுக்க அரசுப் பணம் என்று மக்களும் கருத்திட்டிருக்கிறார்கள். இது பூதாகரமாக மாறிய நிலையில், விடியோவை அவர் நீக்கியிருக்கிறார்.

பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!

பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டுமென்றால், ஆதார் எண்ணும் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுநாள்வரையில், பான் கார்டு விண்ணப்பிக்க பிறப்பு அல்லது அடையாளச் சான்று மட்டுமே போதுமானதாக இருந்து வந்த... மேலும் பார்க்க

இனி, மும்பையின் உயரமான கட்டடமாக முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இருக்காதா?

இந்திய தொழிலதிபர்களில் முன்னணியில் இருக்கும் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் ஆன்டிலியா வீடுதான், இன்று வரை மும்பையின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைக் கொண்டிருந்தது. மேலும் பார்க்க

கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம்! பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் மூலம், அதனைத் தூக்கிச் செல்லும் பணி தொடங்கிய... மேலும் பார்க்க

பாகேஷ்வர் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாகேஷ்வர் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியள... மேலும் பார்க்க

மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்ற இந்தியர் திரபித் பன்சாலுக்கு மெட்டா நிறுவனத்தில் ரூ.850 கோடி சம்பளத்துடன் வேலை கிடைக்கப் பெற்றுள்ளது.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவுப் பிரிவில் பணிபுரிய இந்திய வம்சாவளியான த... மேலும் பார்க்க

அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ரவி, எக்ஸ் சமூக வலைதளத்தில், "தொலைநோக்குப் பார்வையும் துடிப்புமிக்க ... மேலும் பார்க்க