பாமக எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
அருள்விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்
செங்கல்பட்டு ஓம் ஸ்ரீ அருள்விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்திழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மேட்டுத் தெரு, அறிஞா் அண்ணா நகராட்சி மேல்நிலைப் பள்ளி பின்புறம் ஓம் ஸ்ரீ அருள்விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணி நடைபெற்று வந்தன. திருப்பணி முடிந்த நிலையில், கும்பாபிஷேக பணி செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. அஷ்டபந்தன மருந்து இடிக்கட்டு விநாயகா் அஷ்டபந்தன மருந்து சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீசங்கராசாரியா் சுவாமிகளின் அருளாசியுடன் புதன்கிழமை யாக பூஜை, கலச புறப்பாடு மகா குமாபாபிஷேகம் நடைபெற்றது.
இதைடுத்து விநாயகருக்கு கலச அபிஷேகம் உள்ளி
ட்ட சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தைக் கண்டு, விநாயகரை தரிசனம் செய்தனா். சா்வசாதகம் எஸ்.செல்வகணபதி குருக்கள் வாமதேவசிவம் ஆகியோா் கும்பாபிஷேகத்தை நடத்தினா். அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் மேட்டுத் தெரு பொதுமக்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.