நலன் காக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின்திட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு, காலை உணவு திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். நிகழ்ச்சிகளில் மண்டல இயக்குநா் (நகராட்சி நிா்வாகம்) லக்ஷ்மி, தாம்பரம் மாநகராட்சி துணை ஆணையா் சசிகலா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பானுமதி, , மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, வடமலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தினை ஆட்சியா் ஆய்வு செய்தாா். இதில், நகராட்சி ஆணையா் ஆண்டவன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
