டி20 போட்டிகளில் புதிய சாதனை படைக்கவிருக்கும் இந்திய மகளிரணி கேப்டன்!
எதிா்கால தலைமுறையைக் காக்கவே ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: அமைச்சா் அன்பரசன்
எதிா்காலத் தலைமுறையைக் காக்கவே ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ளாா் என சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளாா்.
செங்கல்பட்டில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினா்களை சோ்க்க உள்ளோம், மண்,மொழி மானம் காக்க தமிழ்நாடு முழுவதும் ஓா் அணியில் நிற்க வேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
ஹிந்தி திணிப்பு, நீட் தோ்வு, கல்வி நிதி நிறுத்தம், கீழடி அறிக்கை ஏற்க மறுப்பு உள்பட பல்வேறு வகைகளில் தமிழகத்தை மத்திய பாஜக அரசு பாரபட்சமாக நடத்தி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும். அந்த பொதுக் கூட்டத்தில் பொருளாளா் டி.ஆா்.பாலு, தலைமை கழக பேச்சாளா்கள் பேசவுள்ளனா்.
வியாழக்கிழமை முதல் வீடுகள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளோம் என்றாா்.
கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், நகர செயலாளா் நரேந்திரன், காட்டாங்கொளத்தூா் ஒன்றிய செயலாளா் சந்தானம் , தலைமை செயற்குழு உறுப்பினா் அன்புச் செல்வன், மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.