செய்திகள் :

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைக்கவிருக்கும் இந்திய மகளிரணி கேப்டன்!

post image

இந்திய மகளிரணி டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் டி20 போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தவிருக்கிறார்.

இந்திய மகளிரணி இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலிரண்டு போட்டிகளில் இந்திய மகளிரணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.

அடுத்த போட்டிகள் முறையே ஜூலை 4,9,12ஆம் தேதிகள் நடைபெறவிருக்கின்றன.

இந்தத் தொடரில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வென்றால் உலக அளவில் டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற மகளிரணி கேப்டன் என்ற சாதனை ஹர்மன்ப்ரீத் கௌர் வசம் சென்றடையும்.

தற்போதைக்கு ஆஸி. கேப்டன் மெக் லானிங் முதலிடத்தில் இருக்க ஹர்மன்ப்ரீத் கௌர் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மெக் லானிங் ஓய்வு பெற்றதால் இந்திய அணி கேப்டனுக்கு புதிய சாதனை படைக்க வாய்ப்பிருக்கிறது.

அதிக டி20 போட்டிகளில் வென்ற மகளிரணி கேப்டன்கள்

1. மெக் லானிங் - 76 வெற்றிகள் (ஆஸி. - 100 போட்டிகளில்)

2. ஹர்மன்ப்ரீத் கௌர் - 73 வெற்றிகள் (இந்தியா - 124 போட்டிகளில்)

3. ஹீத்தர் நைட் - 72 வெற்றிகள் (இங்கிலாந்து - 96 போட்டிகளில்)

Indian women's T20 team captain Harmanpreet Kaur is set to set a new record in T20Is.

டிஎன்பிஎல்: எலிமினேட்டரில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெல்ல 141 ரன்கள் இலக்கு!

டிஎன்பிஎல் எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றிபெற 141 ரன்களை இலக்காக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயித்துள்ளது. திண்டுக்கல்லில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் ... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல்: ஆர்சிபியிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐ ஒழுங்காணையம் நோட்டீஸ்!

ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு பிசிசிஐ ஒழுங்காணையம், நெறிமுறை அதிகாரி கூட்டநெரிசலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி... மேலும் பார்க்க

மதிய உணவு இடைவேளை: இந்திய அணி அதிரடி, ஜெய்ஸ்வால் அரைசதம்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 98 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்ச... மேலும் பார்க்க

2-ஆவது டெஸ்ட்: இந்தியா பேட்டிங், பும்ரா அணியில் இல்லை!

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் பும்ரா இல்லை என்பது ரசிகர்கள் மத்த... மேலும் பார்க்க

மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம்! - முகமது ஷமிக்கு கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேக... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவிக்காத இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 2) முதல் தொடங்கு... மேலும் பார்க்க