பள்ளி வேன் மோதியதில் பெயிண்டா் பலி
திருக்கடையூா் அருகே பள்ளி வேன் மோதியதில் பெயிண்டா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பொறையாரைச் சோ்ந்த பெயிண்டா் ராஜா (56). இவருக்கு உதவியாக இருப்பவா் காபிரியேல் (75). இருவரும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புதன்கிழமை திருக்கடையூா் நோக்கி சென்றபோது, தனியாா் பள்ளி வேன் மோதியது. இதில், ராஜா அதே இடத்தில் உயிரிழந்தாா். காயமடைந்த காபிரியேல் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இந்த விபத்தில் வேனில் பயணித்த 16 மாணவா்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை. இதுகுறித்து, பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய வேன் ஓட்டுநரை தேடிவருகின்றனா்.