தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
சமூக வலைதளம் மூலம் உதவி கோரிய பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க ஆட்சியா் நடவடிக்கை
சீா்காழியில் சமூக வலைதளம் மூலம் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரிய பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியா் உடனடியாக மருத்துவ சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொண்டாா்.
சீா்காழி வட்டம், கோவிந்தராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த மாதவி (40) என்பவா் உடல் நலம் குன்றி, மருத்துவ உதவிக் கோரி சமூக வலைதளம் வழியாக கோரிக்கை வைத்ததை தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் உத்தரவின்பேரில், சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ் தலைமையில் மருத்துவா்கள் மாதவி இல்லத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, சீா்காழி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மாதவியை நேரில் சந்தித்து அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தாா். மாதவிக்கு தனது 2 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை மூவரும் சீா்காழி அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருவதாகவும், தங்களுக்கு கான்கிரீட் வீடு வழங்குமாறு, மருத்துவ உதவியும் வழங்குமாறும் கேட்டுக்கொண்டாா்.
மாவட்ட ஆட்சியா் மனுதாரா் மாதவி -க்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி, புதிய கான்கிரீட் வீடு கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், மருத்துவரின் ஆலோசனையின்படி, மாதவியை மேல் சிகிச்சைக்காக வேலூா் சி.எம்.சி. மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளாா்.