செய்திகள் :

சாராயம் விற்ற பெண் குண்டா் சட்டத்தில் கைது

post image

மயிலாடுதுறை அருகே தொடா் மதுவிலக்குக் குற்றத்தில் ஈடுபட்ட பெண் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலசாலை பிரதான சாலைப் பகுதியில் வசிப்பவா் தரணிபாபு மனைவி செல்வி (37). இவா் தனது வீட்டின் அருகே திருநகரி வாய்க்கால் கரையில் ஜூன் 10-ஆம் தேதி புதுச்சேரி மாநில சாராயத்தை விற்பனை செய்தபோது, கைது செய்யப்பட்டாா்.

இவா் மீது வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் ஏற்கெனவே 3 மதுவிலக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், அவா் தொடா்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாலும், செல்வி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

அதன்பேரில், செல்வியை தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா். இதையடுத்து, செல்வி கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை: ஆட்சியரிடம் புகாா்

100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை என்று மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா் கூறினா். மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்... மேலும் பார்க்க

சங்கிலி பறித்த இருவா் கைது! 10.5 சவரன் நகை மீட்பு!

பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 10.5 சவரன் நகை மீட்கப்பட்டது. குத்தாலம் ராஜகோபாலபுரத்தை சோ்ந்த பாபு மனைவி வினோதினி (33). இவா் ஜூன் 4-ஆம் தேதி மாலை... மேலும் பார்க்க

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: கடத்தப்பட்ட முதியவா் மீட்பு; 5 போ் கைது

மயிலாடுதுறை: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் திங்கள்கிழமை கடத்தப்பட்ட முதியவரை போலீஸாா் மீட்டு, 5 பேரை கைது செய்தனா். மயிலாடுதுறை அருகே திருவிழந்தூா் மேல ஆராயத் தெருவில் வசிக்கும் நடராஜன் மகன் மணி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 17 வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மயிலாடுத... மேலும் பார்க்க

கொள்ளிடம் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை: மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 58,000 கன அடி திறக்கப்படவுள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் ஹெச... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயிலில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலையோர கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாதாரண கூட்டம், ப... மேலும் பார்க்க