நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை க...
ரூ. 10 ஆயிரத்தில் அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்!
விவோ நிறுவனத்தின் டி 4 லைட் என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று முதல் (ஜூலை 2) அறிமுகமாகியுள்ளது.
ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் சிறப்பான அம்சங்களுடனும் அதிக பேட்டரி திறனுடனும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
நடுத்தர பட்ஜெட்டில் நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு டி 4 லைட் பொருத்தமானதாக இருக்கும் என விவோ குறிப்பிட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
விவோ டி 4 லைட் ஸ்மார்ட்போனானது, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர் உடையது.
4GBஉள் நினைவகம் + 128GB நினைவகம் உடையது ரூ. 9,999.
6GB உள் நினைவகம் 128GB நினைவகம் உடையது ரூ. 10,999.
8GB உள் நினைவகம் 256GB நினைவகம் உடையது ரூ. 12,999.
6000mAh பேட்டரி திறன் கொண்டது. இதன்மூலம் 70 மணிநேரம் பாடல்களைக் கேட்கலாம்; 22 மணிநேரம் விடியோக்களை பார்க்கலாம். 17 மணிநேரம் இணையத்தை பயன்படுத்தலாம். 9 மணிநேரம் கேம் விளையாடலாம் என விவோ உறுதியளித்துள்ளது.
பின்புறம் 50MP மெயின் கேமராவுடன் 2MP லென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 5MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
மழையின் நனையும்போது பாதிக்காத வகையில் IP64 நீர்புகாத் தன்மை திறன் உடையது.
6.74 அங்குல திரையுடன் பிரகாசமாக இருக்கும் வகையில் 1000 nits திறன் கொண்டது.
இதையும் படிக்க | குறைந்த விலையில் ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன்!
Vivo T4 Lite is now available for the purchase starting today in India. Know all the details here