பசுவதை: அசாமில் 2 நாள்களில் 192 பேர் கைது! 1.7 டன் இறைச்சி பறிமுதல்!
வடகிழக்கு மாநிலமான அசாமில் கால்நடைப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, பசுவதை செய்ததாக சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கால்நடைகளை பலியிடப்படுவதாகவும், பல உணவகங்களில் உரிய அனுமதியின்றி இறைச்சி விற்பனைச் செய்யப்படுவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அசாமின் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினர் நேற்று (ஜூலை 1) முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஜூலை 2) வரை இரண்டு நாள்களாக 178 உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் ஆகியவற்றில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தச் சோதனைகளில் சுமார் 192 பேர் கைது செய்யப்பட்டு, 1,732 கிலோ அளவிலான மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மாட்டிறைச்சி சாப்பிடுவது அசாமில் தடை செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அசாமின் கால்நடைப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, கோயில்கள் அமைந்துள்ள இடங்களிலிருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு கால்நடைகள் பலியிடவும், அதன் இறைச்சிகளை விற்பனைச் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
Cow slaughter: 192 people arrested in 2 days in Assam! 1.7 tonnes of meat seized!
இதையும் படிக்க: கண் எரிச்சல், இரட்டைப் பார்வை! குஜராத்தில் ஒரே பள்ளிக்கூடத்தின் 120 மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல்!