செய்திகள் :

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

post image

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.

கடந்த 1938-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகையை வெளியிடும் அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ‘யங் இந்தியன்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் இயக்குநராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்ட நிலையில், இயக்குநா்கள் வாரியத்தில் சோனியா காந்தி இணைந்தாா்.

இதையடுத்து அந்தக் கடன் தொகைக்காக அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டன. இந்த வழியில், அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக தில்லியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதன் பின்னா் இந்த விவகாரத்தில் பண முறைகேடு ஏதேனும் நடைபெற்ா என்ற கோணத்தில், அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து தில்லியில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டது.

சிறிய தொகைக்கு எப்படி சொத்தையே கேட்க முடியும்?: இந்த வழக்கு சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, ‘யங் இந்தியன் நிறுவனத்தில் சோனியா, ராகுலுக்கு 76 சதவீத பங்குள்ளது. ரூ.90 கோடி கடனுக்கு ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரிக்க யங் இந்தியன் நிறுவனத்தை தொடங்கி சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. அந்தச் சொத்துகளை சோனியாவும், ராகுலும் எடுத்துக்கொள்ள விரும்பினா்.

யங் இந்தியன் நிறுவனத்தின் இயக்குநராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்ட 6 நாள்களில், கடனை திருப்பி செலுத்த வேண்டும் அல்லது அதை பங்குகளாக மாற்றித் தரவேண்டும் என்று அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்திடம் யங் இந்தியன் நிறுவனம் கோரியது.

இந்த விவகாரத்தில் அதிா்வலைகள் உருவாகாமல் தடுக்க நேரடிப் பரிவா்த்தனைகளில் இருந்து காங்கிரஸ் கட்சி ஒதுங்கிக்கொண்டது. அதற்குப் பதிலாக அக்கட்சி யங் இந்தியன் நிறுவனத்தை உருவாக்கியது.

வேறொருவருக்குச் சொந்தமான நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களை அரசியல் கட்சிகள் கையகப்படுத்தும் வழக்கம் உள்ளது. ஆனால் சிறிய தொகைக்கு எப்படி சொத்தையே கேட்க முடியும் என்பதே முக்கிய கேள்வியாகும்’ என்றாா். இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை தொடரவுள்ளது.

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார் சத்யேந்தர் ஜெயின்!

தில்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்துவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில் விசாரணைக்காகத் தில்லி முன்னாள் அமைச்சரும், ஆத் ஆத்மி தலைவருமான சத்யேந்தர் ஜெயின் அமலாக்கத்... மேலும் பார்க்க

தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?

மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது.பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத... மேலும் பார்க்க

டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பாலியல் வன்கொடுமை! செல்ஃபி எடுத்து மிரட்டல்!

புணேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்து, இதுகுறித்து யாரிடமாவத... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை தொடக்கம்: புறப்பட்டது 2வது குழு!

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே அமர்நாத் யாத்திரை கோலகலமாக இன்று(ஜூலை 3) முதல் தொடங்கியுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோ... மேலும் பார்க்க

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.என்ன நடந்தது... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் 5 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான புதன்கிழமை கானா நாட்டுக்குச் ச... மேலும் பார்க்க