செய்திகள் :

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது!

post image

பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் 5 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான புதன்கிழமை கானா நாட்டுக்குச் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கானா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ (The Officer of the Order of the Star of Ghana) விருதை அந்நாட்டின் அதிபர் ஜான் திராமணி மஹாமா பிரதமர் மோடிக்கு அணிவித்தார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி,

”தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா' விருதை எனக்கு வழங்கியதற்காக கானா மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கௌரவம் இந்தியாவுக்கும் கானாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்த கௌரவம் இந்தியா - கானா இடையே வலுவான நட்பை ஏற்படுத்துவதற்கான பொறுப்பை ஏற்படுத்துகிறது. இந்தியா எப்போதும் கானா மக்களுடன் துணைநிற்கும், நம்பகமான நட்பு நாடாக தொடர்ந்து பங்களிக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமராகப் பதவியேற்றப் பிறகு மோடியின் முதல் கானா பயணம் இதுவாகும். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எந்த இந்தியப் பிரதமரும் கானாவுக்குச் சென்றதில்லை.

தொடர்ந்து, டிரினிடாட், டொபாகோ, ஆர்ஜென்டீனா மற்றும் பிரேசில் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதையும் படிக்க : உயிருக்கு அச்சுறுத்தல்: அஜித்குமார் வழக்கின் முக்கிய சாட்சி புகார்!

Prime Minister Narendra Modi has been honored with Ghana's highest award.

அரசு முறைமை விவசாயிகளைக் கொல்கிறது! ராகுல் காந்தி

நாட்டின் அரசு முறைமை விவசாயிகளை அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் கொன்று வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.மகாராஷ்டிர சட்டப்பேரவையில் விவசாயிகளின் தொடர் தற்கொலைகள் ... மேலும் பார்க்க

சுவர், சுவிட்ச் அனைத்தும் 24 காரட் தங்கத்தில்! அரசு ஒப்பந்ததாரர் வீடு என்றால் சும்மாவா?

இந்தியாவில் இருக்கும் மிகவும் வித்தியாசமான வீடுகள் மற்றும் பங்களாக்களை விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பிரபலமானவர் பிரியம் சரஸ்வத்.இவர் அண்மையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கட்டப்... மேலும் பார்க்க

எரிபொருள் தடை நடுத்தர வர்க்கத்தினர் மீதான தாக்குதல்: பாஜகவை சாடிய சிசோடியா!

பாஜக தலைமையிலான தில்லி அரசு நடுத்தர வர்க்கத்தினர் மீது தாக்குதல் நடத்திவருவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினார். தலைநகரில் பயன்படு... மேலும் பார்க்க

குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: கனரா வங்கியைத் தொடர்ந்து மற்றொரு வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை; அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.ப... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார் சத்யேந்தர் ஜெயின்!

தில்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்துவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில் விசாரணைக்காகத் தில்லி முன்னாள் அமைச்சரும், ஆத் ஆத்மி தலைவருமான சத்யேந்தர் ஜெயின் அமலாக்கத்... மேலும் பார்க்க

தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?

மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது.பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத... மேலும் பார்க்க