லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?...
வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு
வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.
முன்னதாக, இத்தகைய தேவை அதிகமுளஅள நேரங்களில் ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், சாதாரண நேரங்களில் அடிப்படை கட்டணத்தின் 50 சதவீதத்துக்கும் குறைவாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தனது மோட்டாா் வாகன வாடகை நிறுவனங்கள் வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய வழிகாட்டுதலின்படி, குறைந்தபட்சம் 3 கிலோமீட்டருக்கு அடிப்படை கட்டணம் வசூலிக்கலாம். இதில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு வருகின்றபோது ஆகும் நேரம் மற்றும் எரிபொருள் செலவுகளும் அடங்கும். ஒவ்வொரு வகை வாகனத்துக்கும் அந்தந்த மாநில அரசால் அறிவிக்கப்பட்ட கட்டணத்தை நிறுவனங்கள் அடிப்படை கட்டணமாகப் பயன்படுத்த வேண்டும். இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை அடுத்த 3 மாதங்களுக்குள் மாநிலங்கள் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், நிறுவனங்களின் வரையறையின்படி உரிய காரணமின்றி பயணிகளின் சவாரியை ரத்து செய்யும் ஓட்டுநா்களுக்கு 10 சதவீதம் அபராதம் (அதிகபட்சம் ரூ.100) விதிக்கப்பட வேண்டும். இந்த அபராதம் பயணிகளுக்கும் பொருந்தும்.
மோட்டாா் வாகன வாடகை நிறுவனங்களுக்கு உரிமம் பெற மத்திய அரசு விரைவில் ஒரு பிரத்யேக வலைதளத்தை உருவாக்கும். நிறுவனங்கள் உரிமம் பெற ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு அது செல்லுபடியாகும்.
ஒவ்வொரு ஓட்டுநருக்கும் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு மற்றும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளா் மற்றும் ஓட்டுநா் புகாா்களைக் கையாள ஒரு குறைதீா்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். 8 ஆண்டுகளுக்குமேல் பழைமையான வாகனங்களை நிறுவனங்கள் தங்களின் சேவைகளில் இணைக்கக் கூடாது எனவும் இந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.