பாகிஸ்தான்: இதுவரை 14 பேருக்கு போலியோ
பாகிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 14 பேருக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைபா் பக்துன்கவா மாகாணத்தில் 19 மாத குழந்தைக்கு அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் போலியோ ஒழிக்கப்பட்டாலும், பாகிஸ்தனிலும், ஆப்கானிஸ்தானிலும் மட்டும் அந்த நோய் இன்னும் பரவிவருகிறது.