ஈரான்: ஐஏஇஏ-வுடன் ஒத்துழைப்பு நிறுத்தம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானின் முக்கிய அணுசக்தி மையஹ்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு (ஐஏஇஏ) அழைத்து வந்த ஒத்துழைப்பை நிறுத்துமாறு ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியன் உத்தரவிட்டுள்ளாா். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்யும் ஐஏஇஏ-வின் திறன் இதனால் குறையும் என்று அஞ்சப்படுகிறது.