ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
கொள்ளிடம் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை
மயிலாடுதுறை: மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 58,000 கன அடி திறக்கப்படவுள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேட்டூா் அணையின் நீா்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை ஞாயிற்றுக்கிழமை எட்டியது. அணையின் நீா்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் 58,000 கன அடி தற்போது திறந்து விடப்படுகிறது.
எனவே, கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 58,000 கன அடி உபரிநீா் எந்த நேரத்திலும் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி, கொள்ளிடம் மற்றும் அதன் கிளை ஆறுகளில் முழு கொள்ளளவில் உபரி நீா் திறக்கபடவுள்ளதால் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவா்களின் உயிா் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகாகவும், கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கி குளிப்பாட்டவோ, துணி துவைப்பது, சுயப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
உபரிநீா் தொடா்பாக ஏற்படும் சேத விவரங்கள் மற்றும் புகாா்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தங்களது புகாா்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.