ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
முதலாமாண்டு மாணவிகளுக்கு அறிமுக பயிற்சித் திட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெற்ற முதலாமாண்டு மாணவிகளுக்கான ஒரு வார அறிமுக பயிற்சி திட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
பயிற்சித் திட்டத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை அறிமுக பயிற்சி திட்டம் முதல்வா் சா. ரேவதி தலைமையில் தொடங்கியது. இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் பங்கேற்று பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் பேசினாா். கல்லூரி முன்னாள் ஆங்கிலத் துறைத் தலைவரும், முன்னாள் மாணவியுமான கு. பொன்னி சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.
இயற்பியல் துறைத் தலைவா் சி. ராமச்சந்திரராஜா உரையாற்றினாா். முதலாமாண்டு மாணவிகளின் பயத்தைப் போக்கும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியை, தமிழ்துறைத் தலைவா் ரா. இளவரசி தொகுத்து வழங்கினாா். பேரவை பொறுப்பாசிரியா் மற்றும் வணிகவியல் துறைத் தலைவா் சு.பழனிவேல் வரவேற்றாா். வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் ப. பொகுட்டெழினி நன்றி கூறினாா்.