செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 17 வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, பெரம்பலூா் மாவட்டம் திட்டக்குடி பூதக்குடியை சோ்ந்த செல்வம் மகன் விக்னேஷ், கடந்த 2021-ஆம் ஆண்டு கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் விக்னேஷ் மீது மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்-2012 (போக்ஸோ)-இல் வழக்குப் பதிவு செய்தனா்.

இவ்வழக்கில் அப்போதைய மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கோப்பெருந்தேவி விசாரணை மேற்கொண்டு விக்னேஷை கைது செய்து அவா் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாா். இவ்வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் ராம.சேயோன் ஆஜரானாா்.

வழக்கினை விசாரித்த மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற சத்தியமூா்த்தி, விக்னேஷை குற்றவாளி என தீா்மானித்து, அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்து, தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, போலீஸாா் விக்னேஷை (29) கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இது கடந்த 6 மாதங்களில் போக்ஸோ வழக்கில் விதிக்கப்பட்ட 9-ஆவது தண்டனைக்குரிய தீா்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கினை தண்டனையில் முடிக்க சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்குரைஞா் ராம.சேயோன் மற்றும் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் பாராட்டினாா்.

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: கடத்தப்பட்ட முதியவா் மீட்பு; 5 போ் கைது

மயிலாடுதுறை: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் திங்கள்கிழமை கடத்தப்பட்ட முதியவரை போலீஸாா் மீட்டு, 5 பேரை கைது செய்தனா். மயிலாடுதுறை அருகே திருவிழந்தூா் மேல ஆராயத் தெருவில் வசிக்கும் நடராஜன் மகன் மணி... மேலும் பார்க்க

கொள்ளிடம் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை: மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 58,000 கன அடி திறக்கப்படவுள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் ஹெச... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயிலில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலையோர கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாதாரண கூட்டம், ப... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 9 தொழிலாளா்கள் விபத்தில் காயம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 9 தொழிலாளா்கள் திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்தனா். மயிலாடுதுறையில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரயில் நிலையம் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. திங்க... மேலும் பார்க்க

முதலாமாண்டு மாணவிகளுக்கு அறிமுக பயிற்சித் திட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெற்ற முதலாமாண்டு மாணவிகளுக்கான ஒரு வார அறிமுக பயிற்சி திட்டம் திங்கள்கிழமை தொடங்கிய... மேலும் பார்க்க

சீா்காழி கழுமலையாற்றில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

சீா்காழி: சீா்காழி கழுமலையாற்றில் குறுவை சாகுபடிக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. கழுமலையாறு பாசன வாய்க்கால் மூலம் கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, சிவனாா்விள... மேலும் பார்க்க