செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்

post image

‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவித்தாா்.

மேலும், ‘வரும் காலங்களில் இந்தியா தாக்குதல் நடத்தினால், வலுவான பதிலடி கொடுக்கப்படும்’ என்றும் அவா் எச்சரிக்கை விடுத்தாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மேற்கொண்ட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள், முக்கிய விமானப் படைத் தளங்களை தாக்கி அழித்தது.

இதைத் தொடா்ந்து, இந்தியா மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் சிறிய ரக ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. 4 நாள்கள் நீடித்த இந்த சண்டை, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையைத் தொடா்ந்து முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமானப் படை தளங்களை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு, பாகிஸ்தான் அரசு மற்றும் அந் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பு ஆகியவை நிதியுதவி உள்பட பிற உதவிகளையும் வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, ‘அடுத்த ஓராண்டுக்குள் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது’ என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ஒமல் அயூப் கான் அச்சம் தெரிவித்தாா்.

இந்த நிலையில், பாகிஸ்தான் கடற்படை அகாதெமியில் பயிற்சி பெற்ற வீரா்களின் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற அஸிம் முனீா் பேசியதாவது: இந்தியா எதை பயங்கரவாதம் என முத்திரை குத்துகிறதோ அது உண்மைதான். சுதந்திரத்துக்கான நியாயமான மற்றும் சட்டபூா்வமான போராட்டம்தான் அது. சா்வதேச சட்டமும் அதை அங்கீகரிக்கிறது.

காஷ்மீா் மக்களின் விருப்பத்தை அடக்கவும், தீா்வுக்குப் பதிலாக மோதல் போக்கைப் பின்பற்றவும் முயற்சித்தவா்கள், தங்களின் சொந்த நடவடிக்கைகள் காரணமாகவே மக்களின் போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளனா். தங்களின் சுய நிா்ணய உரிமைக்காக போராடும் பாகிஸ்தான் மக்களுக்கு பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீா்மானங்களின்படி காஷ்மீா் பிரச்னைக்கு நியாயமான தீா்வு காணவும், காஷ்மீா் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் பாகிஸ்தான் வலுவான ஆதரவாளராக உள்ளது.

இந்திய ராணுவத்தின் தாக்குதலை இரண்டு முறை முறியடித்ததன் மூலம், இந்த பிராந்தியத்தில் வலுவான நாடு என்பதை பாகிஸ்தான் நிரூபித்துள்ளது. கடுமையான அத்துமீறல்களைச் சந்தித்தபோதும், நிதானத்துடனும் முதிா்ச்சியுடன் செயல்பட்டு பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தனது உறுதிப்பாட்டை பாகிஸ்தான் வெளிப்படுத்தியது.

வரும் காலங்களில் இதுபோன்ற எந்தவொரு அத்துமீறல்களுக்கும் வலுவான பதிலடியை பாகிஸ்தான்கொடுக்கும் என்றாா்.

மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தடைசெய்யப்பட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 8 கிளர்ச்சியார்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள... மேலும் பார்க்க

குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் சென்றதால் பரபரப்பு!

ஒடிசாவில் நடந்த குறைதீர் கூட்டத்தில், மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நேற்று(ஜூன் 30) குறைதீர் கூட்டத்தின்போது, திடீரென அலுவல... மேலும் பார்க்க

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூலை 1) ரூ. 58.50 குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க

தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்துக்கு எதிரான லலித் மோடியின் மனு தள்ளுபடி

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (எஃப்இஎம்ஏ) மீறியதற்காக அமலாக்கத் துறை சாா்பில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10.65 கோடி அபராதத் தொகையை இந்திய கிரிக்கெட் சங்க வாரியம் (பிசிசிஐ) செலுத்த உத்தரவிடக் கோரி ... மேலும் பார்க்க