செய்திகள் :

KPY Bala: "இந்த படச் சம்பளத்தில் 2 குடும்பங்களுக்கு வீடு கட்டி தந்தேன்" - கதாநாயகனான பாலா நெகிழ்ச்சி

post image

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.

தவிர பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, பல குழந்தைகளைப் படிக்க வைப்பது எனத் தொடர்ந்து சமூக சேவை செய்து வருவது மூலமும் மக்களின் மனங்களை பாலா கவர்ந்து வருகிறார்.

KPY பாலா
KPY பாலா

தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

நேற்று ( ஜூன் 30) இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியானது. பாலா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘காந்தி கண்ணாடி’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று (ஜூலை 1) சென்னை ராணிப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாலா, “எல்லோருக்கும் பிடித்த படமாக ‘காந்தி கண்ணாடி’ படம் இருக்கும்.

அந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் சம்பளத்தில்தான் இன்று இரண்டு குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

KPY பாலா படம்
KPY பாலா படம்

நான் படம் நடிப்பதற்கு முக்கியக் காரணம் தமிழ் மக்கள் போட்ட பிச்சைதான். அதற்கு நான் என்றைக்கும் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த பட வாய்ப்பு மக்களால்தான் எனக்குக் கிடைத்தது. மக்கள் இல்லை என்றால் நான் இங்கில்லை. எனது மூச்சு இருக்கும் வரை மக்களுக்குச் சேவகனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் நிறைய உதவிகளை மக்களுக்குச் செய்வேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Maargan: 'திரைப்படம் முழுவதும் நம்மை த்ரில்லருக்குள் அழைத்து செல்கிறது'- கார்த்திக் சுப்புராஜ்

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் 'மார்கன்'. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டி இருக்கிறார். இது... மேலும் பார்க்க

Maargan: 'தயவு செய்து ஒரு படத்தை கொல்கின்ற மாதிரி விமர்சனம் செய்துடாதீங்க'- இயக்குநர் சுசீந்திரன்

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் 'மார்கன்'.இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று (ஜூலை 1) நடைபெற... மேலும் பார்க்க

Dhanush: சூடு பிடிக்கும் 'இட்லி கடை'. மீண்டும் ஒரு இந்திப் படம் - தனுஷ் படங்கள் பரபர அப்டேட்

தனுஷுக்கு இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல். தமிழ்,தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து பல மொழிகளில் ஓடிக்கொண்டிருந்தார். சமீபத்தில் 'குபேரா' திரைக்கு வந்தது. பாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் 'தேரே இஷ்க் மெய்ன்' ப... மேலும் பார்க்க

Maargan: 'அந்தக் கதையைக் கேட்டு அழுதேன்' - மார்கன் பட விழாவில் விஜய் ஆண்டனி பேசியது என்ன?

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் 'மார்கன்'.இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று ( ஜூலை 1) நடைபெ... மேலும் பார்க்க

Desingu Raja 2: ``விஜயகாந்துக்குப் பிறகு வெள்ளந்தியாகப் பேசக்கூடியவர்..." - ஆர்.பி உதயகுமார்

இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் விமல் - நடிகை பிந்து மாதவி நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் தேசிங்கு ராஜா. காமெடி கலாட்டா படமான இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குந... மேலும் பார்க்க

Desinguraja 2 : ``உன்னையெல்லாம் யார்டா வில்லனா போட்டது என எழில் சார் திட்டினார்" - ரவி மரியா

இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிப்பில், இயக்கிய இயக்குநர் எழில் இயக்கியிருக்கும் படம் தேசிங்கு ராஜா-2. ஜூலை 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ... மேலும் பார்க்க