உலகளாவிய சந்தையின் ஏற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் மீண்ட இந்திய பங்குச் சந்தைகள்...
Maargan: 'அந்தக் கதையைக் கேட்டு அழுதேன்' - மார்கன் பட விழாவில் விஜய் ஆண்டனி பேசியது என்ன?
லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் 'மார்கன்'.
இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று ( ஜூலை 1) நடைபெற்றது.
இதில் பேசிய விஜய் ஆண்டனி, “ நிறைய வெற்றி படங்கள், தோல்வி படங்களைக் கொடுத்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது.

எந்த ஒரு படமும் ஹீரோவால் ஓடாது. கடவுளே வந்து நடித்தால் கூட ஓடாது. இயக்குநரின் இயக்கமும், எழுத்தும் உறுதியாக இல்லையென்றால் படம் ஓடாது.
இவை இரண்டும் சரியாக இருந்தால்தான் படம் ஓடும். அதனால் நான் எந்தப் படத்தில் நடித்தாலும் அதற்கான அங்கீகாரத்தை இயக்குநருக்குதான் கொடுப்பேன்.
இந்தப் படம் ஓடியதற்கு முழு முதற்காரணம் என்னுடைய இயக்குநர் லியோ ஜான் தான்.
அவருடைய வேலைக்கு உண்மையாக இருந்திருக்கிறார். ஒரு இயக்குநராகவும், எடிட்டராகவும் உண்மையாக இருப்பார். இந்தப் படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் நன்றி ” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “ இதற்கு முன் நான் எவ்வளவு படம் நடித்திருந்தாலும் சரி, இனிமேல் எவ்வளவு படங்கள் நடித்தாலும் சரி ‘பிச்சைகாரன்-1’ படத்திற்கு சமமாக எந்தப் படமும் இருக்க முடியாது.
சசி சார் அந்தக் கதையைச் சொல்லி முடித்தப் பிறகு அழுதேன். இதுவரைக்கும் யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை அடுத்தப் படத்தில் சசி சார் சொல்லி இருக்கிறார். அந்தப் படத்தில் சசி சாருடன் நான் பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அடுத்ததாக ‘சக்தி திருமகன்’ வெளியாக இருக்கிறது. தொடர்ந்து ‘லாயர்’ படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...