செய்திகள் :

2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த ஆயத்தம்: தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு அரசு ஒப்புதல்!

post image

தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு மத்திய அமைச்சரவை இன்று(ஜூலை 1) ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.

மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், நீதி ஆயோக், தேசிய விளையாட்டு சம்மேள்னம், விளையாட்டு வீரர்கள், அத்துறைசார் நிபுணர்கள் ஆகிய பல தரப்பிடமும் கருத்து கேட்டு புதிய விளையாட்டுக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

இதன் முக்கிய குறிக்கோள்களாக, உலகளவில் விளையாட்டுத் துறையை திறம்பட எடுத்துச் செல்லுதல், பொருளாதார மேம்பாட்டுக்கு விளையாட்டு என்பதை ஊக்குவித்தல், சமூக மேம்பாட்டுக்காக விளையாட்டு என்பதை ஊக்குவித்தல், விளையாட்டை மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்லுதல், கல்வியுடன் விளையாட்டை ஒருங்கிணைத்துச் செயல்படுதல் (தேசிய கல்விக் கொள்கை 2020-இல் விளையாட்டுக்கான முக்கியத்துவம் அதிகரித்தல்) ஆகியன நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவிலான விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்திடும் வல்லமைமிக்கதொரு நாடாக இந்தியாவை மாற்ற அதிலும் குறிப்பாக, 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கும் ஏற்ற தொலைநோக்கு பாதைகளுடன் ‘தேசிய விளையாட்டுக் கொள்கை 2001-இன்’ மேம்பட்ட வடிவமாக இந்த புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

உலகளவில் இந்தியாவை விளையாட்டில் முன்னணி நாடாக உருவாக்கவும், வலிமைமிக்க ஊக்கம் மிகுந்த குடிமக்களாக விளங்கவும் இந்த புதிய கொள்கை மாற்றத்துக்கானதொரு புதிய பாதையாக திகழுமென மத்திய அரசால் குறிப்பிடப்பட்டுள்ளது.

Union Cabinet approves National Sports Policy 2025

ஸ்வியாடெக், நவாரோ வெற்றி

ஜொ்மனியில் நடைபெறும் பேட் ஹோம்பா்க் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா். ரவுண்ட் ஆஃப் 1... மேலும் பார்க்க

கண்ணீர் விட்டு அழுத ரொனால்டோ..! போர்ச்சுகல் அணி சாம்பியன்!

நேஷன்ஸ் லீக் கால்பந்து ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது போர்ச்சுகல். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 2 - 2 கோல் கணக்கில் சமன் செய்ததால் பெனால்டி ஷூட் நடைபெற்றது. அதில் 5 கோ... மேலும் பார்க்க

தமிழக வீராங்கனை வித்யா தங்கம் வென்றார்! தைவான் தடகளப் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம்

தைபேய்: ’தைவான் தடகளப் போட்டிகள் 2025-இல்’ இந்தியா இன்று ஒரே நாளில் 5 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் பந்தய தூரத... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 6 தங்கம்! தைவான் தடகளப் போட்டிகளில் ஆதிக்கம்!

இந்திய வீரர், வீராங்கனைகளின் ஆதிக்கத்தால் தைபேயில் இன்று(ஜூன் 7) தொடங்கிய ’தைவான் தடகளப் போட்டிகள் 2025-இல்’ இந்தியா இதுவரை, அதாவது இன்று ஒரே நாளில் 6 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.தைவான் தடக... மேலும் பார்க்க

விளையாடுத் துளிகள்...!

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் ஆடவா் இரட்டையா்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை காலிறுதியில் தோல்வி காண, போட்டியில் இந்தியாவின் ஆட்டம் நிறைவடைந்தது. இங்கிலாந்து லயன்ஸுக்க... மேலும் பார்க்க