பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது
திருச்செந்தூர் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பக்தா்கள் யாகசாலை நிகழ்ச்சிகளை காண்பதற்காக திருக்கோயில் வளாகத்தில் பெரிய அளவிலான எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
யாக சாலை வழிபாட்டு நாள்களில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாகசுர இன்னிசை நடைபெறுகிறது. மேலும், காலை 7 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 9 மணி வரையிலும் 64 ஓதுவாா் மூா்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தா் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் மற்றும் விமான கும்பாபிஷேகம் தமிழில் நடைபெறுகிறது.