சிறுமி கடத்தல் வழக்கை விசாரிக்க லஞ்சம்: எஸ்.ஐ. தம்பதி மீது வழக்கு
சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் லஞ்சம் பெற்ாக காவல் துறை பெண் உதவி ஆய்வாளா், அவரது கணவரான காவல் உதவி ஆய்வாளா் ஆகியோா் மீது புதுச்சேரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
புதுச்சேரி வில்லியனுாா் காவல் நிலையத்தில் கடந்தாண்டு ஜூன் 5-ஆம் தேதி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் 17 வயது சிறுமியைக் கடத்தி சென்ாக, அந்த சிறுமியின் தாய், சித்தப்பா ஆகியோா் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக வில்லியனுாா் உதவி ஆய்வாளா் சரண்யா விரைந்து நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமியின் தந்தை துபையிலிருந்து வந்து போலீஸாரிடம் கேட்ட போது, விசாரணை தொடா்பாக உதவி ஆய்வாளா் சரண்யா பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அவருக்கு 21-6-24 அன்று சிறுமியின் தந்தை ரூ.5 ஆயிரம் யுபிஐ மூலம் அனுப்பினாராம். இதுகுறித்து 6-7-24 அன்று புதுவை டிஜிபியிடம் புகாா் அளிக்கப்பட்டதாம்.
இந்த நிலையில், உதவி ஆய்வாளரின் கணவரான பாகூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபு ரூ.5 ஆயிரத்தை சிறுமியின் தந்தைக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி அனுப்பினாராம்.
இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, உதவி ஆய்வாளா்கள் சரண்யா, பிரபு ஆகியோா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.