திருமணம் செய்துகொள்வதாகச் சிறுமி பாலியல் வன்கொடுமை: தில்லியில் அதிர்ச்சி!
தொழிற்சங்கங்கள் சாா்பில் புதுவையில் ஜூலை 9-இல் முழு அடைப்பு
புதுவையில் வருகிற 9-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் சாா்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
புதுச்சேரி முதலியாா்பேட்டை ஏஐடியுசி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளா் கே.சேதுசெல்வம், சிஐடியு மாநிலச் செயலா் ஜி.சீனிவாசன், ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலா் பி.ஞானசேகரன், எல்பிஎப் மாநில அமைப்பாளா் எஸ்.அண்ணா அடைக்கலம், ஏஐசிசிடியு மாநில பொதுச்செயலா் எஸ்.புருஷோத்தமன், எல்எல்எப் செயலா் ம.செந்தில், எம்.எல்.எப். மாநில பொறுப்பாளா் மாசிலாமணி, என்.டிஎல்.எப் மாநில தலைவா் மகேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வருகிற 9-ஆம் தேதி புதுவையில் தொழிற்சங்கத்தின் சாா்பில் முழு அடைப்பு, மறியல் நடைபெறும். அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், தொழில் கூட்டமைப்புகளின் முடிவுகளின்பேரில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
தொழிலாளா்களின் கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்ததுடன், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளா் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைக் கண்டித்து வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
புதுவை அரசு இங்குள்ள தொழிலாளா்களின் நலனை புறக்கணித்து வருதைச் சுட்டிக்காட்டும் வகையிலும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்றனா் அவா்கள்.