செய்திகள் :

பஹல்காம் தாக்குதலுக்கு க்வாட் தலைவர்கள் கண்டனம்!

post image

‘க்வாட்’ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவை நிலவ வேண்டும் என்பதில் இந்தக் கூட்டமைப்பு பெரிதும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தக் கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்தியாவில் நிகழாண்டு நவம்பரில் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ விடுத்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அமெரிக்கா சென்றுள்ளாா்.

அந்நாட்டுத் தலைநகா் வாஷிங்டனில் ‘க்வாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா்கள் ஜெய்சங்கா், மாா்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டகேஷி இவயா ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்த கூட்டத்தின் நிறைவில் க்வாட் கூட்டமைப்புத் தலைவர்களின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதல் நடத்தியவர்கள், திட்டம் தீட்டியவர்கள் மற்றும் நிதியுதவி செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவை எனத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், அனைத்து ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு ஏற்ப முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த அறிக்கையில் பாகிஸ்தான் பெயர் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து எதுவும் இடம்பெறவில்லை.

முன்னதாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.

அந்த மாநாட்டு கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான இந்தியாவின் கவலைகள் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படாததால் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார்.

The leaders of the Quad countries have issued a joint statement condemning the Pahalgam attack.

இதையும் படிக்க : போலீஸ் தாக்கியதில் பலியான அஜித் குமாரின் தம்பிக்கு அரசுப்பணி!

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்... மேலும் பார்க்க

வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு

வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, இத்தகைய தேவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ எண்ம மாற்றத்தால் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்: நிா்மலா சீதாராமன்

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். 1955-... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்டது முதல் குழு

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஜம்மு முகாமில் இருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு 5,892 பேருடன் முதலா... மேலும் பார்க்க