நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை க...
'அஜித் மரணத்தின் முதல் குற்றவாளி ஸ்டாலின்தான்...' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “ தனிப்படை போலீசார் ஏன் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். அவர்களை விசாரிக்குமாறு உத்தரவிட்டது யார்? யார் அந்த விஐபி? என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வி. திருட்டு வழக்கை விசாரிக்க போலீசாருக்கு உரிமை உள்ளது.

ஆனால் எதற்குத் தாக்கினார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது கேள்வி. குற்றம் சாட்டப்பட்ட நபர் வேறு இடத்தில் இருந்தால் தனிப்படை விசாரிக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போது தனிப்படை ஏன் விசாரிக்க வேண்டும்.
எஸ்.பி-யை பணியிடை நீக்கம் செய்திருக்க வேண்டும். மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசிற்கு உள்ளது. அஜித் குமாரை போலீசார் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இது உண்மையா? இல்லையா? அவர் மீது மிளகாய்பொடி தூவி கொடூரமாகத் தாக்கி உள்ளனர் உண்மையா? இல்லையா? சாதரணமாக கூலிப்படை ஆட்கள் கூட இந்த மாதிரி கொடூரமானக் கொலையை செய்ய வாய்ப்பில்லை.
அஜித்குமாரின் கொலைக்கு அரசே பொறுப்பு என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அஜித்குமாரின் மரணத்திற்கு முதல் குற்றவாளியாகக் காவல்துறையை கையில் வைத்திருக்கக்கூடிய மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின்தான் பொறுப்பு.

ஆகவே அவரின் கையால் ஆகாத அரசு 25 லாக்அப் மரணங்களைத் தொடர்ந்து நடத்தி இருக்கின்ற அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். பதிவு விலக வேண்டும். முதல் குற்றவாளி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு. ஸ்டாலின் வீட்டுக்குச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று விமர்சித்து பேசியிருக்கிறார்.