நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை க...
RBI: இந்திய ரூபாய் நோட்டுகள் எதனால் செய்யப்படுகின்றன தெரியுமா?!
சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் ரூபாய் நோட்டுகளை கையாண்டு தான் வருகிறோம்.
ரூ10, 100 ரூபாய் 500 ரூபாய் தற்போது நிறுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வரை நாம் பயன்படுத்தியிருப்போம். இப்படி கைகளிலேயே புழங்கிக் கொண்டிருக்கும் ரூபாய் நோட்டுகளை எதனை கொண்டு தயாரிக்கின்றனர் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

இது என்ன கேள்வி காகிதம் கொண்டு தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பலரும் நினைப்பீர்கள். ஆனால் அந்த காகிதம் எதன் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறியிருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, ரூபாய் நோட்டுகள் வழக்கமான மர அடிப்படையில் ஆன காகிதத்தால் தயாரிக்கப்படுவதில்லை மாறாக அவை 100 சதவீதம் பருத்திக் கொண்டு தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
காரணம் இவை நீடித்து உழைக்கும் தன்மை, பாதுகாப்பு அதன் பயன்பாடு நீண்ட நாட்களுக்கு இருக்கும் என்பதற்காகவும் இதனை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஏன் பருத்தி?
பருத்தி அடிப்படையில் ஆன ரூபாய் நோட்டுகள் உறுதியானவையாகவும் எளிதில் கிழியாத் தன்மை கொண்டவையாக இருக்குமாம். அதுமட்டுமல்லாமல் கள்ளநோட்டை தடுக்கும் பாதுகாப்பு அம்சங்களையும் இது வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
பருத்தி அடிப்படையிலான நோட்டுகளை இந்தியா மட்டும் பயன்படுத்தவில்லை. அமெரிக்கா, 75% பருத்தி மற்றும் 25% லினன் கலவையைப் பயன்படுத்தி அதன் ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்கிறது.