நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை க...
மன்னார்குடியில் மணல் லாரி மோதி பள்ளி மாணவன் பலி!
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் பள்ளிக்குச் சென்ற மாணவன் புதன்கிழமை பலியாகினார்.
மன்னார்குடி ராவணன் தெருவைச் சேர்ந்தவர் சிவகணேஷ் மகன் அமரேஷ் (வயது 12). இவர் மன்னார்குடி புதிய புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து படித்து வந்தார். புதன்கிழமை காலை வழக்கம் போல் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் அமரேஷ் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
ருக்மணி பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தனியார் திரையரங்கம் அருகே அவ்வழியே மணல் ஏற்றி வந்த லாரி, நிலைதடுமாறி சிவகணேஷ் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் லாரியின் சக்கரம் அமரேஷ் மீது ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி காவல் நிலைய போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து அமரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிவகணேஷும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A student who was going to school with his father on a two-wheeler was killed on Wednesday when he was hit by a sand truck in Mannargudi, Tiruvarur district.