செய்திகள் :

பீகார்: ``வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்'' - தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு சர்ச்சையானது ஏன்?

post image

பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் 2025 அக்டோபர்–நவம்பர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (special intensive revision) நடத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அரசியல் ரீதியாக பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பீகாரில் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக நடந்த கூட்டத்தில் பேசிய பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ``வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை நீக்கும் நடவடிக்கை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இல்லையென்றால் குடியுரிமையும், அரசு மானியத்திற்கான உரிமையை இழப்பீர்கள்.

பீகார் தேர்தல் - தேஜஸ்வி யாதவ்

2024 மக்களவைத் தேர்தலில், சரண் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ராஜீவ் பிரதாப் ரூடி அப்போதே தேர்தல் பொறுப்பாளர்களிடம், '2019 தேர்தலை விட உங்கள் வாக்குச் சாவடிகளில் அதிக வாக்குகளை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த தேர்தலுக்கு முன்பு நமக்கு எதிரான 80,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆர்.ஜே.டி வாக்காளர்கள்.' என 80,000-க்கும் மேற்பட்ட எனது (முஸ்லீம் மற்றும் யாதவ்) வாக்குகளால்" அதிர்ச்சியடைந்தார். எனக் குறிப்பிட்டிரு பேசியிருக்கிறார்.

நேபாளம், வங்காளம், வங்கதேசத்தை எல்லையாகக் கொண்ட முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் சீமாஞ்சல் பகுதியில், 2024 மக்களவைத் தேர்தலில் நான்கு இடங்களில் மூன்றை பா.ஜ.க தலைமையிலான கூட்டணி இழந்தது. அதனால், ஆளும் பாஜக அரசு நாட்டுக்குள் பிறநாட்டினரின் ஊடுருவல் அதிகரித்ததாகவும், அவர்களாலேயே மூன்று இடங்களை இழந்ததாகக் கூறியது.

இது தொடர்பாக பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரேம் ரஞ்சன் படேல், ``வாக்காளர் பட்டியலைத் திருத்த தேர்தல் ஆணையத்திற்கு உரிமை இல்லையா? வாக்காளர்கள் அல்லாதவர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் ஆணையம்

இருப்பினும், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், வாக்காளர்களை நீக்குவதற்கே இது வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய பீகாரின் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி சுதிர் ராகேஷ், ``வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல. இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்திருக்க வேண்டிய ஒரு சாதாரண செயல்முறை. ஆனால், இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இது நடப்பதுதான் சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது" என்றார்.

``கர்நாடகா காங்கிரஸில் அதிகார மாற்றமா?'' - தொடரும் கேள்விக்கு காங்கிரஸ் தலைமை பதில்!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏ.ஐ.சி.சி) பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து வருகிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆ... மேலும் பார்க்க

Trump: `எலான் மஸ்க்கை அவரது நாட்டிற்கு அனுப்ப போகிறீர்களா?' -டிரம்ப் சொன்ன பதில்

ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்லினால் மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் இடையே சலசலப்பு எழுந்துள்ளது. நீண்ட நாள்களுக்கு பிறகு, இந்த பில்லிற்கு எதிராக, ... மேலும் பார்க்க

``நம்முடைய காவல்துறை போன்று சிறப்பாக செயல்படக்கூடிய காவல்துறை எங்கும் இல்லை!'' - அமைச்சர் ரகுபதி

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,"ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் தி.மு.க-வைச் சேர்ந்த ஒவ்வொரு அணியினரும் வீடு வீடாக சென்று, 'எதற்காக நாம் ஒன்றிணை... மேலும் பார்க்க

Doctor Vikatan: மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போதுஎகிறும் BP; கட்டுப்படுத்த முடியுமா?

Doctor Vikatan: என்அம்மாவுக்கு 60 வயதாகிறது. எப்போது எந்தப் பிரச்னைக்காகமருத்துவரைப் பார்க்கப்போனாலும் அவருக்கு BP அளவு தாறுமாறாக அதிகரிக்கிறது. மருத்துவர் BP பார்த்துவிட்டு, குறைத்துவிட்டு வரும்படி த... மேலும் பார்க்க

``பயிற்சி, ஊக்கம் கொடுத்தால் ஆப்பிள் சாகுபடியில் வருவாய் ஈட்ட முடியும்'' -கொடைக்கானல் விவசாயி சாதனை

கொடைக்கானல் கவுஞ்சி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி தன்னுடைய நிலத்தில் ஆப்பிள், குங்குமபூ போன்றவற்றை நட்டு வைத்து 3 வருட காலம் பராமரித்து தற்போது ஆப்பிள் சாகுபடி செய்வதற்கு தயாராக உள்ளார். ஜம்மு காஷ்மீரின்... மேலும் பார்க்க

MP: `90 டிகிரியில் திரும்பும் அபாயகரமான மேம்பாலம்' -கடும் எதிர்ப்பால் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் கட்டுவது வழக்கம். ஆனால் அந்த மேம்பாலங்கள் சில நேரங்களில் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல் கட்டிவிடுவார்கள். அது போன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தி... மேலும் பார்க்க